http://tamil.cri.cn/121/2011/03/04/1s105876.htmபொருளாதார வளர்ச்சி மற்றும் வாழ்க்கை நிலை உயர்ந்து வருவதுடன், சுற்றுலாப் பயணம் மேற்கொள்வது, மக்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறியுள்ளது. தலைமை அலுவலகம் பிரிட்டனின் இலண்டன் நகரில் அமைந்துள்ள உலக பயணம் மற்றும் சுற்றுலா செயற்குழு 3ம் நாள் வெளியிட்ட ஓர் ஆய்வு அறிக்கையில், அடுத்த சில ஆண்டுகளில் உலகச் சுற்றுலாத் துறை தொடர்ந்து முன்னேறி வளர்ச்சியடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதாரம் அதிகரிப்பதில் பல அறைகூவல்கள் மற்றும் உறுதியற்ற காரணிகளின் பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், சுற்றுலாத் துறை, மிக வேகமாக அதிகரித்து வரும் துறைகளில் ஒன்றாக திகழ்கிறது. பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிப்பை விரைவுப்படுத்தும் முக்கிய ஆற்றலாகவும் அது விளங்குகிறது. எதிர்வரும் 10 ஆண்டுகளில் உலகின் மொத்த உற்பத்தி மதிப்பில் சுற்றுலாத் துறையின் ஆண்டு பங்களிப்பு 4.2விழுக்காடாக இருக்கும். அதன் மொத்த மதிப்பு, 9லட்சத்து 20ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்ட இருப்பதோடு, 6கோடியே 50லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் என்று இவ்வாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகச் சுற்றுலாப் பயணத் துறை வளர்வதற்கு, புதிதாக காணப்படும் நுகர்வோர் முக்கிய காரணமாகும். சீனா, இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளின் சுற்றுலா பயணிகள், இந்தச் சந்தையில் நுழைந்து வருகின்றனர். இந்நிலையில், சர்வதேச சுற்றுலா விரைவுப்படுத்தப்படும் அதேவேளை, உலகின் பல்வேறு நாடுகளின் சுற்றுலா துறையும் செழுமையாக வளர்ச்சியடையும் என்று உலக பயணம் மற்றும் சுற்றுலா செயற்குழுவின் தலைவர் டேவிட் ஸ்காவ்சில் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது
விமானம், விடுதிகள், சுரங்க இருப்புப்பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், சீனாவில் கட்டியமைக்கப்பட்டுள்ளன. அது மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. சுற்றுலாத் துறை, பொருளாதார வளர்ச்சிக்கான 5 முக்கிய பகுதிகளில் ஒன்றாகும் என்று சீனத் தலைவர் தெளிவாக உறுதிப்படுத்தினார். மேலும், மெக்சிகோ, மற்றொரு எடுத்துக்காட்டாகும். தேசிய சுற்றுலா வளர்ச்சித் திட்டம் சட்டவிதிகளில் சேர்க்கப்பட, அதன் அரசுத் தலைவர் அனுமதி அளித்ததோடு, 2011ம் ஆண்டை சுற்றுலா ஆண்டாகவும் உறுதிப்படுத்தினார் என்று டேவிட் ஸ்காவ்சில் சுட்டிக்காட்டினார்.
சீன சுற்றுலா துறையின் வளர்ச்சி வேகம் குறித்து, பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்ட் பொருளியல் ஆய்வகத்தின் தலைவர் ஏட்ரியன் கூப்பர் குறிப்பிட்டபோது
அடுத்த 10 ஆண்டுகளில் ஆண்டுதோறும், சீன சுற்றுலா துறை 9விழுக்காடு என்ற வேகத்தில் வளர்ச்சியடையும் என எதிர்ப்பார்க்கிறோம். பொதுவாக கூறின், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் அதன் பங்களிப்பு 8.6விழுக்காடாகும். 2021ம் ஆண்டு, அது 9.2விழுக்காடாக அதிகரிக்கும். 8கோடியே 30லட்சம் வேலைவாய்ப்புகள் அதன் மூலம் உருவாக்கப்படும் என்று கோபெர் தெரிவித்தார்.
அரசின் ஆதரவுடன், சீனாவின் சுற்றுலாத் துறை மேலும் சீராக வளர்ச்சியடையும் என்றும் கூப்பர் கருத்து தெரிவித்தார்.