எழுத்தின் அளவு
http://tamil.cri.cn/121/2011/07/29/63s109313.htmபெய்ஜிங் மருத்துவ மனை மேலாண்மை வாரியம்
我们练习一下这篇文章的语音听力阅读理解。
சீனாவின் தரமான மருத்துவ மனைகள் மிக ஒருங்கிணைப்பாகவுள்ள நகரம், பெய்ஜிங் தான். இந்த மருத்துவமனைகளில், பெரும்பாலனவை அரசு மருத்துவமனைகளே. நீண்டகாலமாக, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதில் இன்னல், அதிகக் கட்டணம் முதலிய பிரச்சினைகள் இருக்கின்றன. இந்நிலையில் அரசு மருத்துவமனைகளின் சீர்த்திருத்தம் அவசரத் தேவையாக இருக்கின்றது. ஜுலை 28ம் நாள், கடந்த ஓராண்டு ஆயத்தத்திற்கு பிறகு, பெய்ஜிங் மருத்துவமனை மேலாண்மை வாரியம் இயங்கத் துவங்கியது. 22 அரசு மருத்துவமனைகளின் சொத்து நிர்வாகக் கண்காணிப்பு, தலைவர் தெரிவு, மருத்துவ மனைகளின் மேலாண்மை முறைமை மற்றும் செயல் அமைப்பு முறையின் சீர்த்திருத்தத்துக்கு வழிக்காட்டுவது, ஒருங்கிணைப்பான உயர் பயனுள்ள அரசு மருத்துவமனை மேலாண்மை அமைப்பு முறையை உருவாக்குவது ஆகியவற்றுக்கு இந்த வாரியம் பொறுப்பேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில், அரசு மருத்துவமனை சீர்திருத்தம் சோதனை முறையில் மேற்கொள்ளப்படும் 17வது நகரமாக பெய்ஜிங் மாறியுள்ளது. பெய்ஜிங் மருத்துவமனை மேலாண்மை வாரியத்தின் உருவாக்கம், மருத்துவ அமைப்பு முறை புத்தாக்கத்தின் முக்கிய பகுதியாகும் என்று சீன சுகாதார அமைச்சர் chen zhu தெரிவித்தார்.
பெய்ஜிங் மருத்துவ மனை மேலாண்மை வாரியம், அரசின் சார்பில், பெய்ஜிங்கின் அரசு மருத்துவ மனைகளை நிர்வகிக்கும். தலைவர் பதிவு, அலுவல், சொத்து ஆகிய நிர்வாகம் சார்ந்த பணிகளுக்கு அது பொறுப்பேற்கும் என்று பெய்ஜிங் சுகாதார ஆணையத்தின் துணைத் தலைவரும் பெய்ஜிங் மருத்துவ மனை மேலாண்மை வாரியத்தின் துணைத் தலைவருமான mao yu தெரிவித்தார். அவர் கூறியதாவது—
தலைவர் பதவி, மருத்துவ மனை வளர்ச்சி, அரசு மருத்துவ மனைகளின் சொத்து ஆகிய நிர்வாக வேலையில் பெய்ஜிங் மருத்துவமனை மேலாண்மை வாரியம் பொறுப்பு ஏற்கும் என்றார் அவர்.
பெய்ஜிங்கின் அரசு மருத்துவமனைகளில் நிலவும், சிகிச்சை பெறுவதில் இன்னல், சிகிச்சை கட்டணம் அதிகம், மருந்துகளின் ஒதுக்கீட்டில் லாப நோக்கு ஆகிய பிரச்சினைகள் குறித்து, mao yu கூறியதாவது—
அரசு மருத்துவமனைகளின் அடிப்படை மேலாண்மையை வலுப்படுத்த வேண்டும். மருத்துவ மனைகளின் செலவினங்கள், பயன், சுற்றுச்சூழல், பாதுகாப்பு, பண்பாடு, புகழ் ஆகியவற்றை இந்த வாரியம் தனது மேலாண்மையில் கருத்தில் கொள்ளும் என்று கூறினார்.